Wednesday, July 13, 2016

PENCIL DRAWING - Kavi Murasu Praveen

 தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 12-07-2016

                                  Kavi Murasu Praveen


PENCIL DRAWING - Kavi Murasu Praveen
PENCIL DRAWING - Kavi Murasu Praveen



PENCIL DRAWING - Kavi Murasu Praveen
PENCIL DRAWING - Kavi Murasu Praveen

       ""ஓவியர்களுக்காக  கவிஞர் எழுதிய கவிதை ""

"எழுத்தே தூரிகையாம், எண்ணங்கள் வண்ணங்களாம், 
வாசக நெஞ்சங்களே காகிதமாய் கவி வரைந்தேன் நான் ஓவியனா..?! 
நான் கற்பனைகளை நிகழ்வுகளை தமிழ் குழைத்து தீட்டுகிறேன்..!! 
ஓவியனோ தூரத்தில் இருப்பதை அருகில் சாத்தியப்படுத்துகிறான்..
விஞ்ஞானம் வளராத காலத்தில் விலங்கின் தோல்களில், தாவர வண்ணத்தில் மிருக ரோமத்தை தூரிகையாக்கி  தீட்டினான் ஆதி  ஓவியன்..!! 
பரிணாம வளர்ச்சியில் இன்று கணினியில்.. 
கால மாற்றம் 
ஒவியத்தின் தரத்தை உயர்த்தியது, ஓவியனை இல்லை..!! 
நூறு பேர் பணிபுரிந்த ஓவிய கூடத்தில் இன்று ஆறு பேரே அரிது..!! 
வாழ்ந்து கெட்ட 
வள்ளலை போலவே வாழ்கிறது ஒவியக்கலை..!! 
செல் போஃனின் செல்ஃபி, போட்டோ ஷாப் போன்ற ஆப்புகள் வைத்த ஆப்பு ஒருபுறம்.. ஓவியக்கலையை ஊக்குவிக்காத சமூகம் மறுபுறம்.. எப்படி 
வளரும் 
அப்புறம்..?! 
வரைகலை இல்லா பாடம் ஏதேனும் பள்ளியில் உள்ளதா சொல்லுங்கள்..?! 
அதனால் அவசர தேவை இக்கலைக்கு முக்கியத்துவம் ..
தமிழறிந்த அனைவரும் கவிஞராவதில்லை, வண்ணங்களை நேசிப்பவர் அனைவரும் ஓவியராய் ஆவதில்லை.. 
ஆனவர்கள் வெகு சிலரே 
அவர்கள் கலைத்தாய்க்கு செல்லபிள்ளை..!!பேனர்களிலும், கான்வாஸிலும் வரைந்த கலைஞன் இன்று சாலையோர சுவர்களில் அரசியல் வரைகிறான்..!! 
கடலளவு வண்ணங்களை கையாண்டவன், 
இன்று கட்சிக்கொடி வண்ணத்திற்குள் கட்டுப்படுகிறான்..!! 
மவுஸ் வந்தபின் மெல்ல மவுசு குறைந்து போனது கைவரை ஓவியம்..!! 
"ஊக்குவிப்பவனை ஊக்குவித்தால் , தேக்கு விற்பான்"என்றார் வாலி..!! 
வீட்டிற்கோர் மரம் வளர்ப்போம் பலன் தரும், வீட்டிலோர் கைவரை ஓவியம் வைப்போம், 
அது ஓவியற்கு பலம் தரும்.. 
ஓவியக்கலைக்கு நிலையான 
தலம் தரும், அவர் வாழ்வு நலம் பெறும்..!! 
நன்றி !! "

கவிமுரசு பிரவீன்..

No comments:

Post a Comment

Followers

J.ELANGOVAN.TRICHY