Tuesday, August 8, 2017

ELANGOVAN ART - SLEEPING BABY

SLEEPING BABY




குழந்தைகள் உறக்கம்...

என் வரைச்சித்திரத்துடன்....

                            புதிதாகப் பிறந்த குழந்தைகள் அதிக நேரம் உறங்குவார்கள். உண்மையில், இந்த சமயத்தில் உங்களுக்கு அதிகளவு உறக்கம் கிடைக்காவிட்டாலும், உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தை ஒவ்வொரு நாளும் 18 மணி நேரங்களை உறக்கத்தில் செலவிடுவான். ஆயினும், ஒரு புதிதாகப் பிறந்த குழந்தையின் உறங்கும்பாணி பெரியவர்களின் உறங்கும் பாணியைவிட வித்தியாசமானது. புதிதாகப் பிறந்த குழந்தைகள், தங்கள் உறங்கும் நேரத்தில் 20% மாத்திரம் ஒரு ஆழ்ந்த உறக்கத்தைக் கொண்டிருப்பார்கள். மீதி நேரங்களில் அங்கும் இங்குமாக உறங்குவார்கள். அதாவது அந்த சமயத்தில் உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையைப் படுக்கவைத்துவிட்டு நீங்கள் குட்டித் தூக்கம் போட முயற்சித்தால், அவன் விழித்தெழுந்து அழத் தொடங்குவான்.
சில புதிதாகப் பிறந்த குழந்தைகள் தங்கள் பகல் நேரங்கள் மற்றும் இரவு நேரங்களை ஒன்றாகக் கலப்பார்கள். அவர்கள் பகல் நேரத்தில் உறங்குவார்கள் மற்றும் இரவு நேரங்களில் விளையாட விரும்புவார்கள். இது தாங்கள் கருப்பையில் இருந்த நாட்களிலிருந்து கடத்தப்பட்டவை. கர்ப்ப காலங்களில், பிறவாத குழந்தை தாய் ஓய்வெடுக்கும்போது, பெரும்பாலும் இரவு நேரங்களில், மிக அதிக சுறுசுறுப்பாக இருப்பான்; தாய் எழுந்து நடமாடும்போது, பெரும்பாலும் பகல் நேரங்களில், அவன் சுறுசுறுப்பை மந்தமாக்குவான். ஒரு தாயின் சுறுசுறுப்பான இயக்கம் பிறவாத குழந்தையைச் சாந்தப்படுத்தி அவன் ஓய்வெடுப்பதற்கு உதவி செய்யும். பிறந்த பின்னர், சில புதிதாகப் பிறந்த குழந்தைகள் , அவர்களின் அளவுக்கதிகமாகக் களைப்படைந்த பெற்றோர் திகைப்படையும்வண்ணம் இந்தப் பாணியைத் தொடருவார்கள்.
உறக்கப் பிரச்சினையில், உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையின் சரியான கண்ணோட்டத்தை விளங்கிக் கொள்ள முயற்சி செய்யவும். புதிதாகப் பிறந்த குழந்தைகள், வளர்ந்த குழந்தைகளை விட, குறுகிய நேர உறக்க சுழற்சி மற்றும் மிகவும் அடிக்கடி இலேசான உறக்க காலப்பகுதியைக் கொண்டிருப்பார்கள். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை விழித்தெழ விரும்புவார்கள். ஒரு முறை விழிந்தெழுந்தால், திரும்பவும் உறங்குவதற்குச் சில சமயங்களில் அவர்களுக்குப் பிரச்சினை இருக்கும். அத்துடன், புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு ஒரு நாளில் 24 மணி நேரங்களில் தாய்ப்பாலூட்டுதல், ஏப்பம் விடுதல், டயப்ர் மாற்றுதல், மற்றும் விளையாடுதல் போன்ற தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். எனவே, அவர்கள் நீண்ட நேரம் உறங்குவது என்பது அர்த்தமற்றது.

No comments:

Post a Comment

Followers

J.ELANGOVAN.TRICHY