Thursday, October 23, 2014

ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி

ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி



உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி 

இருக்கிறது.
நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். 

அவற்றை வாங்கி அதில் 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை 

எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் 

மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் 

ஊறவிடுங்கள்.
காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை 

தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.
பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய 

நீரை குடியுங்கள்.
மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள 

நீரை குடியுங்கள்.
இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை 

தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள்.
1-வது நாள் 1, 1, 1, -3.

2-வது நாள் 2, 2, 2, = 6.

3-வது நாள் 3, 3, 3, = 9.

4-வது நாள் 4, 4, 4, = 12.

5-வது நாள் 4, 4, 4, = 12.

6-வது நாள் 4, 4, 4, = 12.

7-வது நாள் 3, 3, 3, = 9.

8-வது நாள் 2, 2, 2, = 6.

9-வது நாள் 1, 1, 1, = 3.
ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் 

பரிசோதித்துப்பாருங்கள்.
தேவையானால் மறுபடியும் ஒரு தடவை பட்டியலில் குறிப்பிட்டபடி 

செய்து பாருங்கள். இப்பொழுது உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின்கள் 

திருப்தியான அளவில் உயர்ந்து இருக்கும். இந்த ஹீமோகுளோபின் 

உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும்.
உடலில் உற்சாகம் பெருகும். வலிவோடும், வனப்போடும் உடல் மிளிரும். 

கருப்பு திராட்சை ஊறிய நீர்,ரத்தத்தில் கலந்து ஹீமோகுளோபின்கள் 

உருவாக காரணமாக இருக்கும்.www.facebook.com/puradsifm
செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் 

ஹீமோகுளோபினை அதிகரிக்கலாம்.
உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், 

பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. 

உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் 

உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது 

பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் 

படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் 

ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய 

சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர்.
இந்த நிலைமையை நீக்க, மருத்துவரிடம் சென்று இதற்கு ஏதாவது 

மாத்திரை, மருந்து வாங்கி சாப்பிடலாம் என்று, மருத்துவமனையில் 

வரிசையில் காத்திருந்து அவரை பார்த்தால் பல பரிசோதனைகளை 

செய்யச் சொல்லுவார். அவர் கூறிய பரிசோனைகள் அனைத்தும் செய்து, 

அந்த பரிசோதனைகள் அனைத்தும் அவரிடம் காண்பித்தால், உங்களுக்கு 

ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறது என்று கூறுவார். 

நான் உங்களுக்கு மாத்திரை, மருந்து எழுதித்தருகிறேன். ஆறு மாதங்கள் 

சாப்பிடுங்கள் சரியாகிவிடும் என்பார். அவர் கொடுக்கும் அதிக 

விலையுள்ள மாத்திரைகளையும், மருந்துகளையும் விலை கொடுத்து 

வாங்கி, அவருக்குரிய கட்டணத்தையும் கொடுத்து, ஆறுமாதம் 

சாப்பிட்டாலும் ஏதோ சிறிது பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு 

உள்ளதே தவிர, மறுபடியும் பழைய நிலையில் பாதிகூட சரியாகவில்லை.
நமது உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது அந்த அணுக்கள் 

குறைந்த ரத்தம் உடல் முழுவதும் உற்சாகமாக ஓட முடிவதில்லை. நமது 

உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்கமுடி வதில்லை. உடல் களைப்பு 

அடைகிறது. பத்து பேர்கள் செய்யவேண்டிய வேலையை இருவர் 

செய்வார்களானால், எவ்வளவு தாமதம் ஆகுமோ, எவ்வளவு தடங்கல் 

ஏற்படுமோ, அதே தடங்கலும், தாமதமும் நம் உடலில் ஏற்படுகிறது. 

உடலில்
ஹீமோகுளோபின் குறையும் பொழுது மேலே குறிப்பிட்ட அத்தனை 

குறைபாடுகளும் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படுகிறது.
நமது உடல் அதற்கு தேவையான சத்துக்களை, நாம் உட்கொள்ளும் 

ஆகாரத்திலிருந்து பிரித்து எடுத்துக் கொள்ளுகிறது. எவ்வளவு சத்துக்கள், 

எந்தெந்த சத்துக்கள் தேவையோ, அந்த அளவு மட்டும் உறிஞ்சி 

எடுத்துக்கொண்டு, மீதி உள்ளவற்றை கழிவு பொருட்களாக உடலிருந்து 

வெளியேற்றி விடுகிறது. அதிகமான சத்துக்களை நாம் உண்டாலும், 

அத்தனை அளவு சத்துக்களையும் உடல் ஏற்றுக்கொள்வதில்லை. மீதியை 

கழிவுப் பொருட்களாக தள்ளிவிடுகிறது.
ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14 - 18 கிராம் அளவிலும், 

பெண்களுக்கு 12 - 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும். 8 கிராம் 

அளவிற்கு கீழே குறையும் பொழுது, இரத்த சோகை என்ற நோயும், மற்ற 

தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. 

ரத்தத்தில் எவ்வளவு அளவு ஹீமோகுளோபின் இருக்கிறது என்பதை 

சோதனைச் சாலையில் ரத்தத்தை பரிசோதிக்கும் பொழுது தெரியவரும். 

ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் பொழுது, 

உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட 

ஆரம்பிக்கின்றன.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது ரத்தம் நல்ல சிகப்பு 

நிறமாகவும், உடலில் ரத்த ஓட்டத்தின்போது நுரையீரலுக்குச் சென்று 

நாம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது, அந்த மூச்சுக் காற்றில் 

உள்ள ஆக்ஸிஜனை ரத்தம் ஏற்று உற்சாகம் பெறுகிறது. பிறகு ரத்தம் 

உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது, தன்னில் ஏற்கும் கழிவுப் 

பொருட்களை கார்பன்டை ஆக்ûஸடு ஆக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப 

வந்து வெளியேற்றுகிறது. பிறகு உற்சாக ரத்த ஓட்டமாக மாறி உடலுக்கு 

சக்தியூட்டுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை 

ரத்தத்தில் ஏற்றுக்கொண்டு, உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி, 

அவைகளை நன்கு இயக்கி, உடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி 

செய்ய வைக்கிறது.

.

Tuesday, October 14, 2014

PENCIAL DRAWING


             CLICK ME - ALL DRAWINGS





                                       நான் வரைந்த ஓவியங்கள் 

என் மகளுக்கு project வேலைகள் செய்வதற்காக விளையாட்டாக வரைய ஆரம்பித்தேன் .
தற்சமயம் இதனை அனுபவித்தவுடன் தெரிவது என்னவென்றால் கோவில்களுக்கு சென்று இறைவனை கும்பிடுவதால் கிடைக்கும் மன அமைதியைவிட 
தியானம் செய்வதால் கிடைக்கும் மன அமைதியைவிட ,
கதை ,கவிதை எழுதுவதால் கிடைக்கும் மன அமைதியைவிட,
பிறருக்கு உதவி செய்வதால் கிடைக்கும் மன அமைதியைவிட,
பிற பொருட்களை அல்லது பிற மனிதர்களை  வரைவதால் மிக மிக அதிகமாக மன அமைதி கிடைக்கிறது .
மேலும் ஒரு மனிதனுக்கு 
கூர்மையான பார்வை 
கூர்மையான புத்தி 
கூர்மையான செயல் 
இவை மூன்றும் இருந்தாலே வாழ்வில் வெற்றி நிச்சயம் என்பதை வரைந்து அனுபவித்து கற்றுகொண்டேன் .
நான் படிக்கும் பொது இருந்த ஓவிய ஆசிரியர்கள் ,மற்றும் உலகில் உள்ள அனைத்து ஓவியர்களின் சேவைகளுக்கு என் பணிவான நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .
 ஓவியர்களின் சேவைகள் நம் வருங்கால மாணவர்களுக்கும் ,நம் எதிர்கால இந்தியாவிற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறேன் .
ஓவியர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .










அறிஞர் அண்ணாதுரை அவர்கள்



பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் 


ELANGOVAN
Thein Soe Aung

Sathia Moorthy


 Ramesh Ramesh.


mahatma gandhi










RADHA


Srinivasan Mahamuni

GOPI GOPAL
ANJAPPAN

பொங்கல் நல்வாழ்த்துக்கள் .










மறைந்த தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கருப்பையா மூப்பனார்








Syed Abuthahir


Elangovan 
Elangovan


Artist ArjunKalai

Elangovan 

Elangovan 


Elangovan 

Elam Valuthi (student)


kaala biravar 
raksheetha priya

Elangovan 


anjappan (worker)
JELANGOVAN
elangovan



Elangovan








Follow J Elangovan's board PENCIL ART on Pinterest.

Followers

J.ELANGOVAN.TRICHY