Thursday, September 22, 2016

PENCIL DRAWING - SKILL INDIA

தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 20-09-2016

                                                SKILL INDIA             

                                                          TURNER 
                                          
விவசாய தந்தைகளே !
உங்கள் குழந்தைகள் 
விஞ்ஞானிகளாக மாறுவதை !!
என்னால் முடிந்தவரை 

கைச்சித்திரமாக காட்டுகிறேன் !!!


PENCIL DRAWING - SKILL INDIA
PENCIL DRAWING - SKILL INDIA

 அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் படிக்க வரும் மாணவர்களின் பெற்றோர்கள் பெரும்பாலும் கிராமங்களில் விவசாயமும் , நகரத்தில் கூலி வேலையும் செய்பவர்கள் ...

இவர்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு வகையான தொழிற் பிரிவுகளையும் , புதிய அரசு தொழிற் பயிற்சி நிலையங்களையும் அமைத்து வருகிறது ...

மாநில அரசு இன்னும் ஒரு படி மேலே சென்று மாணவர்கள் படிப்பிற்க்காக மாதம் ரூபாய் 500 /- உதவித்தொகை, விலையில்லா லேப்டாப் ,மிதிவண்டி , பாடப்புத்தகம் ,காலனி ,பள்ளி சீருடை ,பஸ்பாஸ் இலவசம் என பல உதவிகள் அளித்து ,மாணவர்களை தொழிற்கல்வி படிக்க வைத்து, அவரவர் தரத்திற்கேற்ப அரசு வேலை , தனியார் கம்பெனி வேலை,வெளிநாட்டு வேலை என்று மாணவர்களையும் ,அவர்கள் குடும்பத்தாரையும் பல படிகள் உயர்த்தி வருகிறது ....

என்னிடம் இதுவரை படித்து முடித்த 100 மாணவர்களில் குறைந்தது 20 மாணவர்கள் திருச்சி BHEL நிறுவனத்திலும் ,40 மாணவர்கள் வரை ரயில்வே மற்றும் துப்பாக்கி தொழிற்சாலை , பீரங்கி தொழிற்சாலை ,ராணுவம் ,போலீசாகவும் மற்ற மாணவர்கள் வெளிநாடு ,தனியார் கம்பெனிகளிலும் பணிபுரிந்து வருகின்றனர் ..

நான் படித்ததும் அரசு தொழிற்பயிற்சி நிலையம் திருச்சி தான்.....
நண்பர்களே இனி உங்களுக்கு நேரம் இருந்தால் உங்கள் பொன்னான கருத்துக்களை சொல்லுங்கள் ...



Followers

J.ELANGOVAN.TRICHY