PENCIL DRAWING
தினம் ஒரு ஓவியம் வரைவோம் -09-03-2017
Rabindranath Tagore
PENCIL DRAWING - Rabindranath Tagore |
PENCIL DRAWING - Rabindranath Tagore |
PENCIL DRAWING - Rabindranath Tagore தமிழில் தேசியகீதம் |
தேசிய கீதம்,
கீதாஞ்சலி, சாந்தி நிகேதன், வங்காளம் ரபீந்திரநாத் தாகூர் நினைவில் கொள்ள இப்படி எத்தனை
எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. சிறுவயதில் தாகூருக்கு வகுப்பறைகள் பிடிக்கவில்லை.
வகுப்பறையின் ஜன்னல் வழியே தெரியும் மேகமும் பறவைகளும், செடி, கொடி, மரங்களும் அவருக்குக்
கவிதைகளாகத் தெரிந்தன. தாகூர் அடையாளப்படுத்தும் விஷயமாக கவிதை மாறிப்போனது. மென்மையான
மனிதர் தாகூர்.
ஆனால் வங்கப்பிரிவினையை
எதிர்த்து அவர் நடத்தியதோ அழுத்தமான போராட்டங்கள். தாகூரின் வாழ்க்கையை வாசிக்கும்
போது, ஒரு நல்ல கவிதையை வாசிக்கும் அனுபவம் கிடைக்கும்.
இனிய தமிழில்
இந்திய தேசிய கீதம்...
வங்க மொழி...
ஜன கண மன
அதிநாயக ஜெய ஹே
பாரத பாக்ய
விதாதா.
பஞ்சாப சிந்து
குஜராத்த மராட்டா
திராவிட உத்கல
வங்கா.
விந்திய இமாச்சல
யமுனா கங்கா
உச்சல ஜலதி
தரங்கா.
தவ ஷுப நாமே
ஜாகே,
தவ ஷுப ஆஷிஷ
மாகே,
காஹே தவ ஜெய
காதா.
ஜன கண மங்கள
தாயக ஜெயஹே
பாரத பாக்ய
விதாதா.
ஜெய ஹே, ஜெய
ஹே, ஜெய ஹே,
ஜெய ஜெய ஜெய,
ஜெய ஹே.
இதன் நேரடி
தமிழாக்கம்...
மக்கள் பெருங்கூட்டத்தின்
மனத்தில் ஆட்சி செய்பவள் நீ தான். வெற்றி உனக்கே !
இந்தியத்
திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ..
பஞ்சாப் மாகாணம்,
சிந்து நதிப்பிரதேசம், குஜராத் மாநிலம், மராட்டிய மாநிலம்,
திராவிட பீடபூமி,
உத்கலமாகிய ஒரிஸ்ஸா மாநிலம், வங்காள (பங்கா) தேசம் உன்னுடையது ..
விந்திய இமாசல
யமுனா கங்கா
மூன்று திசைகளிலும்
உன்னைச் சூழ்ந்திருக்கும் மாக்கடல்கள் உன் புகழை தங்கள் அலைக் கரங்களால் எப்போதும்
பாடிக் கொண்டிருக்கின்றன..
உனது மங்கலகரமான
திருநாமத்தை எப்போதும் நாங்கள் பாடிப் போற்றிக் கொண்டிருக்கிறோம்.,
உனது மங்கலகரமான
ஆசிகளை வேண்டி நிற்கின்றோம்.,
உன்னுடைய
மாபெரும் வெற்றியை வேண்டியே நாங்கள் பாடிக்கொண்டிருக்கிறோம்..
இந்திய மக்களின்
மங்கலங்களை அள்ளித் தருபவள் நீ. வெற்றி உனக்கே!
இந்தியத்
திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ..
வெற்றி உனக்கே!
வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே!
வெற்றி! வெற்றி!!
வெற்றி!!! வெற்றி உனக்கே!.
ஆனால்...
இதை அப்படியே உபயோகித்தால் தேசிய கீதத்தின் ராகம் வரவில்லை என்பதால் சொல்லாடல்களை சுருக்கி...
தேசிய கீதத்தின்
உண்மையான பொருள் படும்படி அமைத்து...
மக்களின்
மனங்களில் ஆள்பவள் நீயே
இந்திய வளங்களின்
அரசி
பஞ்சாப் சிந்து
குஜராத் மராட்டியம்
திராவிடம்
ஒடிசா வங்கம்
விந்திய இமயம்
யமுனா கங்கை
முக்கடல்
நின் புகழ் பாடும்
உன்புகழ்
பாடி மகிழ்வோம்
உன் ஆசி வேண்டி
நிற்போம்
உன் வெற்றி
தனையே புகழ்வோம்
இந்திய வெற்றியின்
தாரகை நீயே...
இந்திய வளங்களின்
அரசி
வெற்றி...
வெற்றி... வெற்றி...
உனக்கே என்றும்
வெற்றி..
தமிழாசிரியர்
உயர்திரு. முத்துநிலவன் அவர்கள் அவரின் வலைபூ பக்கத்தில் http://valarumkavithai.blogspot.in/2013/07/blog-post_29