எங்கள் ஆசிரியர் பிறந்தநாள் விழா -25-02-2021
திருச்சி புத்தூர் பிஷப்ஹீபர் உயர்நிலைப்பள்ளி PT ஆசிரியர் உயர்திரு மார்டின் அய்யா அவர்களுக்கு, படிக்கும் காலத்தில் PULL UP BAR ல் ஏற்றிவிட்டு குச்சியால் அடிப்பீர்கள்..
அதன் அர்த்தம் இப்பொழுதுதான் தெரிகிறது..
வாழ்க்கையில் ஏற்றமும் இறக்கமும் இருக்கும்...
ஆனால் ஏறுவதற்குதான் கஷ்டப்படவேண்டும்.
இறங்குவதற்கு ஒன்றும்செய்யவேண்டாம். தன்னால் இறக்கம் வந்துவிடும் என்பதை சிறுவயதில் உணர்த்தி இன்று எங்களை வாழ்க்கையில் உயர்ந்திட வைத்த வள்ளலே. உங்களின் 150 வது பிறந்தநாளிலும் நாங்கள் அனைவரும் இதுபோல ஒன்று கூடி ஆசிர்வாதம் வாங்க எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரம் கூப்பி வேண்டிக்கொள்கிறேன்.
நன்றி ஐயா...