Sunday, December 29, 2013

ஒரு கிராம் தோரியம் 28000 லிட்டர் எரிபொருளுக்கு சமமானது.

உலகில் உள்ள தோரியத்தில் 50 சதவீதம் இந்தியாவில் தான் உள்ளது. அதிலும் குறிப்பாக தமிழகம், ஆந்திரா, ஒடிசா கடற்கரைகளில் மணாலாக கொட்டிக் கிடக்கிறது.

காரில் இப்போது பயன்படுத்தப்படும் பெட்ரோல் எரி பொருள்களுக்குப் பதிலாக தோரியத்தை எரிபொருளாக பயன்படுத்தும் ஆராய்ச்சி வெற்றி பெற்றுள்ளது. இப்போதுள்ள காரின் என்ஜின் பாகத்தை மட்டும் மாற்றினால் போதும்.

அமெரிக்காவைச் சேர்ந்த லேசர் பவர் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் இந்த என்ஜினை தயாரித்துள்ளது.

ஒரு கிராம் தோரியம் 28000 லிட்டர் எரிபொருளுக்கு சமமானது. 8 கிராம் தோரியத்தைப் பயன்படுத்தி ஒரு காரை 100 ஆண்டுகளுக்கு இயக்க முடியுமாம் !.

தோரியம் கார்களை பயன்படுத்தும் போது சுற்று சூழலும் பாதுக்காக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. காரணம் பெட்ரோலிய எரிபொருள்களில் இருந்து வெளியாகும் கரியமில வாயு இதில் இருந்து முற்றிலும் வெளிவராது.

இந்த கார் நடைமுறைக்கு வந்தால் உலகின் முக்கிய எரிபொருள் வழங்கும் நாடாக இந்தியா - குறிப்பாக தென் மாநிலங்கள் இருக்கும்.

Followers

J.ELANGOVAN.TRICHY