Friday, March 10, 2017

PENCIL DRAWING - ACTRESS KUTTY PADMINI


                PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -26-02-2017

            ACTRESS KUTTY PADMINI 



PENCIL DRAWING - ACTRESS KUTTY PADMINI
PENCIL DRAWING - ACTRESS KUTTY PADMINI 


Kutty Padmini
Movie actress
Kutty Padmini is a South Indian movie actress who predominantly works in Kollywood. She was a child star in her debut movie Ambala Anjulam. She has also acted in Telugu and Malayalam movies. Wikipedia
Born: 5 June 1956 (age 60 years), Chennai
Spouse: Prabhu Nepal
Shows: Ramanujar, Kalasam
Songs
Kozhi Oru Koottiley
Kuzhandaiyum Deivamum · 1965


PENCIL DRAWING - OSHO RAJNEESH

              
                   PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -19-02-2017


                       OSHO RAJNEESH


PENCIL DRAWING - OSHO RAJNEESH
PENCIL DRAWING - OSHO RAJNEESH

***ஓஷோ சிந்தனைகள்***
தம்மிடம் இல்லாத பணத்தைக் கொண்டு
தமக்குத் தேவையில்லாத பொருட்களை வாங்கி அடுக்கி தமக்குத் தெரியாதவர்களைக் கவர எண்ணுவது பலருக்கும் வாடிக்கை ஆகி விட்டது.
நமக்கு எது வசதி என்பதில் எது சரி என்பதை மறந்து விடுகிறோம்.
பயம் கதவைத் தட்டுகிறதா?நம்பிக்கையோடு எழுந்து போய் கதவைத் திறக்க சொல்லுங்கள்.
வெளியே ஒருவரும் இருக்க மாட்டார்கள்.
வாழ்க்கையில் சின்ன சின்ன சந்தோசங்களையும் அனுபவித்து விடுங்கள்.
நாளை, ஒருவேளை,திரும்பிப் பார்க்கையில் அவை தவற விடப்பட்ட பேரின்பமாகத் தெரியும்.
ரசித்ததை பொறாமை காரணமாக பாராட்டாத ஒருவன் கொலைகாரனுக்கு சமமாவான்.
கடவுள் உன்னிடமிருந்து தன்னை எப்போதும் மறைத்துக் கொள்வதில்லை.
நீ தான் உன்னுடைய கோப தாபங்களால் அவரைக் காண முடியாத படி கண்களை மூடி வைத்துக்கொள்கிறாய்.
எதையும் உனக்குத் தேவை என்று ஆசைப் படுமுன் மும்முறை நினைத்துப்பார்.
உனக்கே ஆச்சரியமாக இருக்கும்.
99% தேவையற்றதாகவே இருக்கும்.
அவை உன்னைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கின்றன.
உனக்குள்ளே நீ இருக்க அவை நேரமோ இடமோ தருவதில்லை.
கண்ணில் பட்ட சிறுமணல் எப்படி இந்த அழகிய உலகத்தைப் பார்க்க முடியாமல் செய்து விடுகிறதோ, அதைப்போல,சிறிய தயக்கம் அல்லது சந்தேகம், இந்த வாழ்வின் பெருமை, அழகு, உங்கள் பலம் அனைத்தையும் மறைத்து விடும்.
வெற்றி என்பதில் எந்தத் தகுதியும் கிடையாது. உண்மையாகச் சொன்னால், அது மிகவும் அருவருப்பானது. ஒருவனைத் தோற்கடிப்பது என்பது அர்த்தம் இல்லாதது.
ஆனால் அதைத்தான் மனம் விரும்புகிறது.
வெற்றி என்பது நம் பழைய மிருக வாழ்க்கையின் மிச்சம்.
கோடிக்கணக்கில் மக்கள் ஒருவருக்கொருவர் தீர்ப்பு சொல்லிக் கொண்டும், சண்டை போட்டுக் கொண்டும் இருக்கிறார்கள்.
சட்டம் என்பது தவறான மனிதனுக்கு உரியது. சரியான மனிதனுக்கு அல்ல.
ஏனென்றால்,இந்த முழு உலகமும் தவறான மனநிலையில் செயல் படுகிறது.
எப்போதாவது ஒரு சரியான மனிதன் வந்தால், அவனை ஒரு அயலான் போலத்தான் பார்க்கிறது.
முழுமை என்று எதுவும் இல்லை.வாழ்வின் முழுமை என்று தோன்றுவது ஒரு பொய்மைதான்.
ஒரு புத்திசாலி,வாழ்வு என்பது குற்றமற்ற நிறைவானது அல்ல என்று புரிந்து கொள்வான்.
அது எப்போதும் குறைகள் நிறைந்ததுதான்.
நாம் எல்லோரும் குறை நிறைந்தவர்கள் தான்.
ஒருவனிடத்தில்,இங்கே அங்கே உங்களுக்குப் பிடிக்காத சில குறைகள் இருக்கலாம்.
அதே சமயம் அவனிடம் நீங்கள் விரும்பும் சில நிறைவுகளும் இருக்கும்.
நீங்கள் ஒருவரை விரும்பினால் அவரை மாற்றவேண்டும் என்று அதற்கு அர்த்தம் இல்லை.
தகவல்....


PENCIL DRAWING - ADIYOGI


                   PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -22-02-2017

                                   ADIYOGI
PENCIL DRAWING - ADIYOGI
PENCIL DRAWING - ADIYOGI


PENCIL DRAWING - ADIYOGI
PENCIL DRAWING - ADIYOGI

****ஆதி யோகி****
என் கைச்சித்திரத்துடன்....
நாம் செய்யும் ஒவ்வொரு வினைக்கும் உறுதியாக எதிர்விளைவு ஒன்று உள்ளது.
பாவம் போக்கும் சிவன் மந்திரம்
சிவபெருமான்
தன் வினைதான் தன்னைச் சுடும். நாம் செய்யும் ஒவ்வொரு வினைக்கும் உறுதியாக எதிர்விளைவு ஒன்று உள்ளது. நல்லது செயின் நல்ல விளைவுகள் ஏற்படும்.
நமச்சிவாய வாழ்க!
நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!
ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி!
தன்னோ ருத்ர ப்ரச்சோதயாது!
ஓம் த்ரயம்பகாய வித்மஹே ம்ருத்யுஞ்சாய தீமஹி!
தன்னோ பரமசிவ ப்ரச்சோதயாத்
ஒருவர் செய்யும் ஒவ்வொன்றிற்கும் அதற்கேற்ற தீய விளைவுகள் அவர்கள் அனுபவிக்க நேரிடும்.
அத்தைகைய பாவ விளைவுகளை களைய, ஒருவர் தன்னுடைய ஆணவத்தை துறந்து, சிவனை மனதார வணங்கி, தான்செய்த தீய வினைகளை அவனடியில் சமர்ப்பித்து, மேலே கூறப்பட்டுள்ள சிவன் மந்திரங்களை சொல்லி இறைவனை வணங்க வேண்டும்.
சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும். எனவே ஒரு திங்கள் கிழமையில் அல்லது சிவராத்திரி அல்லது பிரதோஷ தினத்தில் சிவன் சன்னதியில் உங்கள் பிரார்த்தனையை ஆரம்பித்து தினமும் கடைபிடித்து வர வேண்டும்.

உங்களுடைய பாவ வினைகள் நீங்கி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்திடும். வாழ்வில் நிறைவு ஏற்படும்.

3D PENCIL DRAWING - SNAKE


                  3D PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -20-02-2017

                                  SNAKE
3D PENCIL DRAWING - SNAKE
3D PENCIL DRAWING - SNAKE

3D PENCIL DRAWING - SNAKE
3D PENCIL DRAWING - SNAKE
பாம்பு கடித்துவிட்டால், பாம்புக்கடிக்குள்ளானவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதீர்கள். ஏனெனில் பெரும்பாலன தனியார் மருத்துவமனையில் பாம்பு கடித்தோரை "அட்மிட்" செய்வதில்லை. எனவே கால தாமதம் செய்யாமல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும்.
பாம்புக்கடி" பற்றிய சில தகவல்கள்:
கடித்த இடம், மனிதன் கடித்தது போல் அனைத்து பற்களும் வரிசையாக பதிந்து காணப்படுகிறதென்றால், இந்த அறிகுறி விஷப்பாம்பு கடி அல்ல.
கடித்த இடம், இரண்டு பற்கள் மட்டும் சற்று இடைவெளியில் பதிந்த்து காணப்படுகிறதென்றால், கடித்த இடம் சற்று தடித்து (வீங்கி) கடுமையான வலி உண்டானால், இந்த அறிகுறி விஷப்பாம்பு கடியாகத்தான் இருக்கும்.
பாம்பு கடிக்கு முதலுதவி:-
இறுக்கி கட்டுப் போடவேண்டாம். இறுக்கி கட்டுப் போடுவதன் மூலம், சில சமயங்களில் விஷம் ஓரிடத்திலேயே தங்குவதால் கடித்தப்பகுதி அழுகிபோகும். லேசான இறுக்கத்துடன் கட்டுப்போடுவது நல்லது.
காயப்பட்ட இடத்தை ஓடும் நீரில் சோப்பு போட்டு மூன்று முறை கழுவவும்.
பாம்பு கடிபட்டவர் பதற்றமடையகூடாது. அவர் பதற்றமடையும்போதும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
பாம்பு கடித்துவிட்டால் வேகமாக நடக்க கூடாது. ஏனெனில் நாம் வேகமாக நடக்கும்போது ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதனால் நம் ரத்தத்தில் கலந்துள்ள விஷம் விரைவில் நம் உடல் முழுவதும் பரவி உயிரிழப்பை விரைவுபடுத்துகிறது
இயன்றவரை பாம்புக் கடிக்குள்ளானவரை தைரியமூட்டி எந்த அளவிற்கு அவரின் இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துகின்றோமோ அந்த அளவிற்கு அவரைக் காப்பாற்றும் வாய்ப்புள்ளது.
பாம்பு கொத்திய இடத்தை, இதயத்தை விடத் தாழ்த்தி வைக்கவும். பாம்புக் கடிக்குள்ளானவரை படுக்க வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும்.
பாம்பு கடித்துவிட்டால், பாம்புக் கடிக்குள்ளானவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதீர்கள். ஏனெனில் பெரும்பாலன தனியார் மருத்துவமனையில் பாம்பு கடித்தோரை "அட்மிட்" செய்வதில்லை. எனவே கால தாமதம் செய்யாமல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும்.
இயலும் என்றால் பாம்பு பற்றிய விபரங்களைப் பெறவும். சில சமயங்களில் அடித்துக் கொல்லக்கூடிய நிலை ஏற்படலாம். எனினும் இவ்வாறு அடிக்க நேர்ந்தால், பாம்பின் தலையில் அடித்துக் கொல்ல வேண்டாம். ஏனென்றால் தலையை வைத்துத்தான் பாம்பை இனம் காணலாம். கடிபட்ட நேரம் போன்ற தகவல்கள் முக்கியமானவை.
பாம்பு கடித்து உடலில் விஷம் பரவிவிட்டால் கிட்னியையும், கண்களையும் உடன் பாதிக்ககூடும். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்.



3D PENCIL DRAWING - TABLESPOON

                  3D PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -19-02-2017

                            Tablespoon

3D PENCIL DRAWING - TABLESPOON
3D PENCIL DRAWING - TABLESPOON

3D PENCIL DRAWING - SCORPION


3D PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -17-02-2017


3D PENCIL DRAWING - SCORPION
3D PENCIL DRAWING - SCORPION

3D PENCIL DRAWING - SCORPION
3D PENCIL DRAWING - SCORPION
தேள் (Scorpion) கணுக்காலிகள் பிரிவைச் சேர்ந்த உயிரினமாகும். தேள்களில் கருந்தேள் உள்ளிட்ட பல வகைகள் உள்ளன
இதன் உடல் கணுக்களால் ஆனது. இது ஆறு கால்களும் இரண்டு முன்பக்கக் கொடுக்குகளும் கொண்டிருக்கும். இதன் வால் கணுக்களாகவும் நுனியில் ஒரு நச்சுத்தன்மையுள்ள கூர்மையான கொடுக்கும் கொண்டிருக்கும். முன்பக்கக் கொடுக்குகள் இரையைக் கவ்விப் பிடிப்பதற்கும் பின்பக்கக் கொடுக்கு இரை அல்லது எதிரிகள் மீது நஞ்சைப் பாய்ச்சிக் கொல்வதற்கும் உதவுகின்றன.
தேள் கடித்தால் ஆயுள் முழுவதும் இதயத்தில் அடைப்பு, இதயம் செயலிழப்பால் இறப்பு நேரிடும் வாய்ப்பை தடுக்கிறது. இதை இங்கிலாந்தை சேர்ந்த லீட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சி தெரிவிக்கிறது. அது மேலும் கூறியதாவது: இதயத்தின் ரத்த தமனிகளில் நியோயின்டிமல் ஹைபர்பிளேசியா என்ற பிரச்னை ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்த பிரச்னை உள்ளவர்களின் இதய ரத்த தமனிகளில் ரத்த செல்கள் புதிதாக வளரும். தமனியில் ரத்த ஓட்டத்தை அவை தடுக்கும். அதனால், இதயக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, இதயம் செயலிழக்கும் அபாயம் ஏற்படலாம்.
உயிருக்கு ஆபத்தான இந்த பிரச்னையை சரி செய்ய, இதய அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஆனால், இந்த பிரச்னையே வாழ்நாளில் ஏற்படாமல் இருக்க தேள் உதவுகிறது. தேள் கொட்டும்போது அதன் கொடுக்கில் இருந்து விஷம் வெளியாகிறது. அந்த விஷத்தில் மார்கடாக்சின் என்ற பொருள் இருக்கிறது. அது இதயத் தமனியில் நியோயின்டிமல் ஹைபர்பிளேசியா உருவாவதை தடுக்கிறது. அதன்மூலம், புதிய செல்கள் உருவாவது தடுக்கப்பட்டு, இதயத்தில் அடைப்பு, செயலிழப்பு தவிர்க்கப்படும்.
இதயத் தமனிகளில் புதிய செல்கள் உருவாவதை மார்கடாக்சினில் உள்ள கேவி 1.3 என்ற பொட்டாசியம் தடுத்து விடும். இது தொடர்பான ஆராய்ச்சியில் நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்க பார்க் என்ற தேளின் விஷத்தில் மார்கடாக்சின் அதிகம் உள்ளது. தேள் கொட்டுவதால் மனித உயிருக்கு ஆபத்தில்லை என்ற போதிலும் துடிக்கச் செய்யும் வலி, வீக்கம் ஆகியவற்றுக்கு உடனடி சிகிச்சை தேவை.
ஒரு முறை தேள் கொட்டு வாங்கியவர்கள் ஆயுள் முழுக்க இதய பைபாஸ் பிரச்னையில் இருந்து தப்ப முடியும் என்கிறது ஆராய்ச்சி முடிவு. இது பற்றி பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷனின் இயக்குனர், ஆராய்ச்சி பேராசிரியர் பீட்டர் வீஸ்பெர்க் கூறுகையில், தேளின் விஷத்தில் உள்ள மார்கடாக்சினை முறையாக பயன்படுத்தினால், ஆபத் தான இதய நோய்க்கு மருத்துவ பயனை பெறலாம் என்பது உறுதி என்றார்.
தேள் கடிக்கு முதலுதவி
கொடிய வகை தேள்கள் கடித்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும். எனவே தேள் கடிக்கான முதலுதவி சிகிச்சை முறைகளை அனைவரும் அறிந்துகொள்வது நல்லது.
தேள் கடித்தவுடன் அதன் கடிவாய்க்கு சுமார் 15 செ.மீ. மேல் பகுதியில் கயிறு அல்லது துணியால் இறுக்கி கட்டவேண்டும். இதன் மூலம் தேளின் விஷம் உடலில் பரவுவதை தடுக்க முடியும்.
இதன் பின்னர் தேள் கடித்த இடத்தில் சுமார் அரை மணி நேரம் ஐஸ்கட்டி அல்லது குளிர்ந்த நீரில் நனைத்த துணியால் ஒத்தடம் கொடுக்க வேண்டும். அந்த துணியால் கடிவாய் பகுதியில் கட்டும் போடலாம். இதன் மூலம் தேள் கடித்த வலி ஓரளவு குறையும்.
கடித்த இடத்தில் தேளின் கொடுக்கு பதிந்திருந்தால் அதை உடனடியாக அகற்ற வேண்டும். தேள் கடித்த பகுதியை உதறவோ, மேல் நோக்கி தூக்கவோ கூடாது. கீழ்நோக்கி தொங்கபோடலாம்.
முதலுதவி செய்ததும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று முறையான மருத்துவச் சிகிச்சை பெறுவது அவசியம்.
தேள் விஷம் – சிறந்த வலி நிவாரணி
தேளின் விஷம் மிகக் கொடியதாக இருக்கலாம். ஆனால் அதை சிறந்த வலி நிவாரணியாக பயன்படுத்தலாம் என கூறுகிறார் இஸ்ரேல் ஆய்வாளர் மைக்கேல் குர்விட்ஸ்.
இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழக தாவர அறிவியல் துறை பேராசிரியர் மைக்கேல் குர்விட்ஸ் கூறுகையில், தேளின் விஷத்திலிருந்து சிறந்த வலி நிவாரணியை உருவாக்கக் கூடிய சாத்தியங்கள் உள்ளன. இதுகுறித்து விரிவாக ஆய்வு செய்து வருகிறோம்.
எந்தவித பக்க விளைவையும் தேளின் விஷத்திலிருந்து உருவாக்கப்படும் வலி நிவாரணி ஏற்படுத்தாது. தேளின் விஷத்தில் உள்ள பெப்டைட் டாக்சின்கள், நமது நரம்பு மண்டலம் மற்றும் சதைப் பகுதிகளில் ஊடுறுவி வலியை முற்றிலுமாக அகற்ற உதவும்.
பாலூட்டிகளின் உடல்களில் ஒன்பது வகையான சோடியம் வழிகள் (sodium channels) காணப்படுகிறது. இவற்றில் சிலதான், வலியை உருவாக்கி அதை மூளைக்கு தெரிவிக்கிறது.
இந்த சோடியம் சேனல்களில் பெப்டைட் டாக்சின்கள் எவ்வாறு செயல்பட முடியும் என்பதை ஆய்ந்து வருகிறோம். இதை சரி செய்து விட்டால் நிச்சயம் இந்த வலி நிவாரணியை வெற்றிகரமாக உருவாக்க முடியும்.மேலும் வலி உருவாகும் இடத்தையும் துல்லியமாக கண்டறிந்து அந்த இடத்தில் மட்டும் மருந்து வேலை பார்க்கும் வகையில் செய்ய முடியும். இதன் மூலம் பல்வேறு பக்க விளைவுகளை நாம் தவிர்க்க முடியும் என்றார் குர்விட்ஸ். இஸ்ரேலில் உள்ள மஞ்சள் நிற தேளில்தான் தற்போது குர்விட்ஸ் தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது. உலகிலேயே மிகவும் அபாயகரமான நச்சைக் கொண்டது இந்த தேள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேளின் விஷத்தில் 300க்கும் மேற்பட்ட பெப்டைடுகள் உள்ளனவாம்

BALL POINT PEN DRAWINGS













Followers

J.ELANGOVAN.TRICHY