Sunday, December 29, 2013

ஆம் ஆத்மி கட்சி அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழா



கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழாவில் அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால். மகள் ஹர்சிதா மகன் மற்றும் பெற்றோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். அவர்களும் கெஜ்ரிவாலுடன் மெட்ரோ ரெயிலில் டிக்கெட் எடுத்து வந்தனர். அவர்களுடன் ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களும் மற்ற மந்திரிகளின் குடும்பத் தினர்களும் அந்த ரெயிலில் சென்றார்கள்.
தந்தை முதல்–மந்திரியானது பற்றி மகள் ஹர்சிதா கூறுகையில் ‘‘எனக்கு இது மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. இது அப்பாவின் முதல்படி. அடுத்து அவர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற போராட வேண்டியது உள்ளது. அவர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார். மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும். லஞ்சம் இல்லாத இந்தியா உருவாகும் என்றார்.
கெஜ்ரிவாலின் தந்தை கோபிந்த் ராம் கெஜ்ரிவால் பட்டதாரியான இவர் எலக்ட்ரிகல் என்ஜினீயர் ஆவார். தாய் கீதாதேவி. இவரும் பட்டதாரியாவார்.
அரவிந்த் கெஜ்ரிவால் 1968–ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16–ந் தேதி பிறந்தார். பள்ளிப்படிப்பை முடித்ததும் காரக்பூரில் ஐ.ஐ.டி.யில் படித்து மெக்கானிக்கல் என்ஜினீயர் ஆனார். 1989–ம் ஆண்டு முதல் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணிபுரிந்தார். 1992–ல் அந்த வேலையை ராஜினாமா செய்து விட்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினார். நேரு யுவ கேந்திராவில் பணிபுரிந்தார்.
சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று இந்திய வருவாய்த்துறை பணியில் (ஐ.ஆர்.எஸ்) சேர்ந்தார். டெல்லி வருமான வரித்துறையில் இணை கமிஷனராக 2006–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இருந்த போது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அவர் ஒப்பந்தப்படி 3 ஆண்டுகள் பணிபுரியாமல் விதியை மீறி விட்டதாக மத்திய அரசு அவர் மீது குற்றம் சாட்டியது. இந்த நிலையில் அன்னாஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் சேர்ந்து போராட்டத்தில் பங்கேற்றார். அதுவே அவரை அரசியல் கட்சி தொடங்க வைத்து ஆட்சி கட்டிலில் அமர வைத்தது.
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இவரும் இந்திய வருவாய்த்துறையில் (ஐ.ஆர்.எஸ்) பணிபுரிந்து வருகிறார்.
கெஜ்ரிவாலுக்கு ஹர்சிதா என்ற மகள் தவிர புல்கித் என்ற ஒரு மகனும் உள்ளனர். இருவரும் பள்ளியில் படித்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment

Followers

J.ELANGOVAN.TRICHY