என் கவிதை
காவியத் தென்றலாய்
கனவில் வந்தவள்
காலை எழுந்ததும்
காணாமல் போனாளே!
காலை முதல் கதிரவனாய்
கண்களுக்கு விருந்தளித்து
மாலை மலர்ந்ததும்
மறைந்தே போனாளே!
மேகத்தின் சூழலிலே
மின்னிட்ட மின்னலவள்
மழையாய் பொலிந்தவுடன்
மின்னிட மறந்தாளே!
வீசும் காற்றினிலே
வாசமாக வந்தவள்
மூச்சை விட்டதும்
மணம் வீச மறுத்தாளே!
ஆடிடும் கடலலையாய்
( தொடரும் .....)
காவியத் தென்றலாய்
கனவில் வந்தவள்
காலை எழுந்ததும்
காணாமல் போனாளே!
காலை முதல் கதிரவனாய்
கண்களுக்கு விருந்தளித்து
மாலை மலர்ந்ததும்
மறைந்தே போனாளே!
மேகத்தின் சூழலிலே
மின்னிட்ட மின்னலவள்
மழையாய் பொலிந்தவுடன்
மின்னிட மறந்தாளே!
வீசும் காற்றினிலே
வாசமாக வந்தவள்
மூச்சை விட்டதும்
மணம் வீச மறுத்தாளே!
ஆடிடும் கடலலையாய்
அருகினில் வந்தவளை
அணைத்தே பிடித்திட்டேன்
அய்யகோ காணலியே !
( தொடரும் .....)
No comments:
Post a Comment