PENCIL DRAWING
தினம் ஒரு ஓவியம் வரைவோம் -12-03-2017
MOSQUITO
PENCIL DRAWING - MOSQUITO |
உலகளவில், மக்கள் அறிந்திருக்கும் கொசு வகைகளின் எண்ணிக்கை, 3000ஐத் தாண்டியுள்ளது. இதில், 80 வகை கொசுக்கள் மக்களின் இரத்தத்தை உறிஞ்சும்.
அதிலும், சில கொசுக்கள், தங்களது வகையைச் சேராத கொசுக்களையே சாப்பிட்டு விடும்.
கொசுக்களின் பரிணாம வளர்ச்சி, ஓர் அற்புதமான நிகழ்வு.
ஒரு கொசு, முட்டையிலிருந்து, முழு வளர்ச்சி அடைந்த கொசுவாக மாறுவதற்கு தேவைப்படும் காலம், 5 நாட்கள் மட்டுமே.
முட்டையிலிருந்து வெளிவந்த சில நிமிடங்களுக்குப் பின், கொசுக்கள் இனப் பெருக்கம் செய்ய முடியும். மேலும், கொசுவுக்கு முள் போன்ற கூரியமுனையுடைய இரத்த உறிஞ்சுக்குழல் உண்டு.
கொசுவின் துணையுறுப்புகள் மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு மண் சட்டியில் தீ கணல் போட்டு அதில் பச்சை வேப்பிலை போட்டு அதன்மீது சிறிது மஞ்சள் தூளையும் தூவிவிடுங்கள். அப்புறம் பாருங்கள் ! அதிலிருந்து வரும் புகை கொசுவை விரட்டோ விரட்டுனு விரட்டிவிடும்.
ஒரு கொசுகூட இனி இருக்கக்கூடாது. அதற்கு என்ன வழி!
தேங்காய் நார்களை எரித்து அதன் புகையை வீட்டில் காண்பித்தாலும் ஒரு கொசுகூட இருக்காது!
கொசு தொல்லை ஒழிந்திட
மாம்பூவை எடுத்துக் கொள்ளுங்கள். வீட்டின் ஒரு பக்த்தில் நெருப்பை வைத்து அதன்மீது மாம்பூக்களை போடுங்கள். அதிலிருந்து வரும் புகையால் கொசு தொல்லை ஒழிந்துபேகும்!
கொசுவுக்கு பிடிக்காத வாசனை எது?
தெரியுமா உங்களுக்கு!
அது பூண்டு வாசனை! இந்த பூண்டு வாசனையை கண்டா கொசுவுக்கு சுத்தமா பிடிக்காது! அதனால நீங்க பூண்டு சாப்பிட்டிங்கனா அந்த பூண்டு நாத்தம் தாங்காம கொசு ஓடியே போய்விடும்!
No comments:
Post a Comment