PENCIL DRAWING
தினம் ஒரு ஓவியம் வரைவோம் -16-04-2017
PENCIL DRAWING - EASTER |
PENCIL DRAWING - EASTER |
இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளையே கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகின்றனர்.
கி.பி. 29ஆம் ஆண்டிலிருந்து ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுவதாக வரலாறு கூறுகிறது.
எனினும் கி.பி. 325இல் அப்போதைய ரோம சாம்ராஜ்யத்தை ஆண்ட மாமன்னர் கான்ஸ்டைன் காலத்தில் இருந்துதான் ஈஸ்டர் பிரபலமானதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஈஸ்டர் பண்டிகையை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பதை விளக்கி தனியாக சட்டமும் பிறப்பிக்கப்பட்டது. ஈஸ்டர் என்ற வார்த்தைக்கு ‘வசந்த காலம்’ என்ற அர்த்தமும் உண்டு.
இயேசுவின் உயிர்த்தெழுதலை குறிக்கும் ஈஸ்டர் பற்றி விரிவாக அறிய கிறிஸ்துவத்தின் அடிப்படை தத்துவங்களை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
உலகையும் அதன் சகல ஜீவராசிகளையும் சிருஷ்டித்த தேவாதி தேவன் தன்னுடைய சாயலாக ஆதாமையும், ஏவாளையும் உருவாக்கினார். ஏதேன் தோட்டத்தில் அவர்களோடு உலாவித் திரிந்தார். ஆனால் ஏமாளி ஏவாள் சாத்தான் சூழ்ச்சியில் எளிதாக வீழ்ந்தார். ஏவாழுக்காக ஆதாமும் பாவத்தில் விழுந்தார்.
தன்னுடைய சாயலாக ஆசை, ஆசையாக படைத்த மனிதன், பாவத்திற்கு ஆட்பட்டதால் அவர்கள் இருவருக்கும் சில தண்டனைகளை விதித்து தன்னுடைய பரிசுத்த சமூகத்திலிருந்து துரத்தி விட்டார் தேவன்.
அதன்பின் ஆதாமும், ஏவாளும் ஆணும், பெண்ணுமாக ஏராளமான பிள்ளைகளை பெற்றார்கள். மனித குலம் பல்கிப் பெருகி கடற்கரை மணல் போல் பன்மங்கானது.
அதைவிட வேகமாக பாவம் பல்கிப் பெருகியது. பாவத்தின் சாபத்தால் மனிதர்கள் மூப்படைந்து மறித்தார்கள். அவர்களின் ஆத்மாக்கள் வீணாய் அழிந்தன.
ஆதாமும், ஏவாளும் தன்னை விட்டு விலகினாலும் மனிதகுலத்தின் மீது இறைவன் கருணையுடனே இருந்தார்.
நோவா, ஆபிரகாம் என சில நல்ல மனிதர்கள் இறைவனின் சொல்படி நடந்தார்கள். அவர்களை ஆண்டவர் ஆசீர்வதித்தார். ஆனால் பெரும்பான்மை மக்கள் பாவத்திற்குள் சிறைப்பட்டு செத்து மடிந்தார்கள்.
அவர்களுக்காக பரிசுத்த பரம பிதா தம்முடைய ஒரே பேரான குமாரனை உலகின் மீட்பிற்காக மண்ணுலகிற்கு அனுப்பி வைத்தார். அவர்தான் இயேசு கிறிஸ்து.
உலகை உய்விக்க ரட்சகராய் அவதரித்த இயேசு கிறிஸ்து, 30 வயது வரை பெற்றோருக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்தார். அதன் பின் உலக மீட்பிற்கான இறைவனின் திட்டத்தை மக்களுக்கு விளக்கி போதனை செய்தார். 3 ஆண்டுகள் இரவும் பகலும் இடைவிடாது மக்களைச் சந்தித்து அவர்களுக்கு நல்வழிகளை போதித்தார்.
பின்னர் உடனிருந்த சீடர்களினால் காட்டி கொடுக்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டார். தேவவாக்கியம் நிறைவேறும் படியாக மூன்றாம் நாளில் உயிர்தெழுந்தார்.
உலகத்தில் உள்ள மனிதர்களின் பாவத்திற்காக இயேசு கிறிஸ்து தம் ஜீவனை கொடுத்து நீதிக்காக உயிர்தெழுதலை போற்றும் விதமாக கிறிஸ்தவர்களால் இந்த தினம் ஈஸ்டர் தினமாக கொண்டாடப்படுகின்றது.
No comments:
Post a Comment