ELANGOVAN ART |
ELANGOVAN ART |
என் வரைச்சித்திரத்துடன் வணங்குகிறேன்...
தமிழக மக்களின் இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் என மக்களால் அழைக்கப்படும் மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
எம்.ஜி இராமச்சந்திரன் அவர்கள் ஜனவரி 17 , 1917 ஆம் வருடம் இலங்கையில் பிறந்தார்.
எம்.ஜி.ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன், ஜனவரி 17, 1917 – டிசம்பர் 24, 1987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர்.
நாடங்களில் வாழ்வை தொடங்கிய நமது தலைவர் மக்கள் இதயத்தில் தெய்வமாக டிசம்பர் 24 , 1987 யில் மறைந்தார்.
50 வயதினை கடந்த மக்கள் மத்தியில் மட்டுமல்ல எம்ஜிஆர் இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியிலும் நீங்கா இடம்பிடித்த வள்ளல் தலைவர் ஆவார்.