தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் - .14-02-2016.
நண்பர்கள் அனைவருக்கும் நாளை பிறக்கும் புத்தாண்டு
சிறப்புற நான் வரைந்த ஓவியத்துடன் இன்றே வாழ்த்துக்கள் ......
ஹையக்ரீவர் மந்திரம்
ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹையக்ரீவமுபாஸ்மாஹே
Hayagreeva |
வாகர்த்த ஸித்திஹேதோ :
படத ஹயக்ரீவஸம்ஸ்துதிம் பக்த்யா !
கவிதார்க்கிககேஸரிணா
வேங்கடநாதேந விரசிதாமேதாம் !!
"துர்முக" என்றால் குதிரை என்று அர்த்தம்.
HORSE |
துர்முகி ஆண்டில் சுக்கிரனின் ஆதிக்கம் உள்ளது.
சுக்கிரனுக்கு அடுத்ததாக ஆதிக்கம், அதிகாரம் பெறுவது,
புதன் .
புதனின் அதிதேவதை ஶ்ரீஹயக்ரீவர்.
ஞானம், கல்வி, நேர்மை ஆகியவற்றை அளிப்பவர் இவர்.
அவர் மகளே 'துர்முகி '.அவள் பெயரை இந்த துர்முகி ஆண்டு முழுவதும் ஶ்ரீ ஹயக்ரீவரின் சக்தியே மக்களுக்குத் துணையிருந்து வழிகாட்ட இருப்பதால், இந்த ஆண்டிற்கு இந்த பெயர் ஏற்பட்டுள்ளது.
அதாவது, பரி (குதிரை) முகத்தைத் கொண்டுள்ள ஶ்ரீ ஹயக்ரீவரின் அனுக்ரகத்தை தரும் ஆண்டாகத் திகழப் போவதை துர்முகி என்ற அவர் மகள் பெயர் கொண்டுள்ளது.
தந்தையை வணங்க மகள் மனம் குளிர்வாள் அல்லவா .அதனால்
ஸ்ரீ ஹயக்ரீவரை வணங்கி இந்த வருடம் முழுவதும் நன்மை அடைவோம் .