Friday, January 27, 2017

PENCIL DRAWING - JASWANT SINGN RAWAT



                                    PENCIL DRAWING 

தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 15-01-2017
                             Jaswantsinghrawat

PENCIL DRAWING  - JASWANT SINGN RAWAT
PENCIL DRAWING  - JASWANT SINGN RAWAT 

PENCIL DRAWING  - JASWANT SINGN RAWAT
PENCIL DRAWING  - JASWANT SINGN RAWAT 

 
  """சீனா காளைகளை அடக்கிய சிங்கம் """

அவர்களின் கைச்சித்திரம் வரைந்து வணங்குகிறேன்.....
இந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்..! சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை.


15 நவம்பர் 1962. இந்தோ - சீனப் போர் முடியும் தருணம். இந்திய ராணுவம் தொழில்நுட்ப ரீதியாகவும், மனதளவிலும் தளர்ந்து இருந்த நேரம். இந்திய அரசு படைகளைத் திரும்ப அழைத்துக் கொண்டிருந்த சமயம். சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இருக்கும் அனைத்து, எல்லைக் கோடுகளில் இருந்தும் இந்திய ராணுவ வீரர்கள் துவண்டு போய், தலையைத் தொங்க போட்டுக் கொண்டு, தேசத்தின் தோல்வியை ஜீரணிக்க முடியாமல் தங்கள் தலைமையகத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள். அடிபட்ட வீரர்கள் சிகிச்சை பெற மறுத்துக் கொண்டிருந்தார்கள். என் தேசம், எதிரி நாட்டிடம் கையேந்துகிறதே என வருத்தத்தில் வெம்பிக் கொண்டிருந்தார்கள். கர்வால் ரைஃபல்ஸ் (Garhwal Rifles) படைப் பிரிவைச் சேர்ந்த ஜஸ்வந்த் சிங் ராவத் #jaswantsingrawat, திரிலோக் சிங் நேகி, கோபால் சிங் ஆகிய மூவரும் மற்ற ராணுவ வீரர்களுக்கு மாறாக முடிவெடுத்தார்கள்.

ஜஸ்வந்த் சிங் ராவத், அருணாச்சலப் பிரதேசத்தின் நூர்னாங் (Nauranang) பகுதியில் (இன்று தவாங் பகுதியில் இருக்கிறது), சீன ராணுவத்தினர்களின் மீது, தன் தாக்குதலைத் தொடர்ந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு வயது 21. அவரோடு, திரிலோக் சிங் நேகி, கோபால் சிங் போன்றவர்களும் போராடிக் கொண்டிருந்தார்கள்.
சீனா, அன்றைய தேதியில் மீடியம் மிஷின் கன் ரக துப்பாக்கிகள், ஆர்டிலரிகள் (பீரங்கி ரக துப்பாக்கிகள்), மார்டர் ரக துப்பாக்கிகளை வைத்து அசால்டாக முன்னேறிக் கொண்டிருந்தது. நூர்னாங்கை பாதுகாத்துக் கொண்டிருந்த ஜஸ்வந்த், கோபால் மற்றும் திரிலோக்கிடம் இருந்தது வெறும் லைட் மிஷின் கன் ரக துப்பாக்கிகள் மட்டுமே. போர் சூழல் சீனாவுக்கு சாதகமாக எளிதில் மாறிக் கொண்டிருந்ததை, இந்த மூவராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

மூன்று பேரும் போர்க்களத்தில், அதுவும் வலிமையான ராணுவத்துக்கு எதிராக, ஒரு அதிரடி முடிவெடுத்தார்கள். சீன ராணுவத்திடமிருந்து மீடியம் மிஷின் கன் (MMG) ரக துப்பாக்கிகளை கைப்பற்றி அவர்களையே தாக்குவதுதான் திட்டம். இந்த ஆபத்தான வேலையை அடுத்த நொடியிலேயே செயலாக்கத் தொடங்கினார்கள். திரிலோக் சீன ராணுவத்தினரை ஜஸ்வந்த் மற்றும் கோபாலின் அருகில் கூட வராத முடியாதபடி தோட்டாக்களைத் தெறிக்கவிட்டார். ஜஸ்வந்தும், கோபாலும் கையில் கிடைத்த ஹேண்ட் க்ரேனைட்கள், எம்.எம்.ஜி ரக துப்பாக்கிகளை எல்லாம் எடுத்துக் கொண்டு, பின் புறமாக முதுகினாலாயே தவழ்ந்து (CRawl) இந்திய எல்லைகளுக்குள் வந்தார்கள். இவர்கள் இந்திய எல்லைகளைக் கடப்பதற்கும் திரிலோகை சீனர்கள் சாய்ப்பதற்கும் சரியாக இருந்தது. திரிலோக் சாய்ந்து விழுவதற்குள் அடுத்தடுத்த குண்டுகள் கோபால் சிங்கை துளைத்தது, அதோடு ஜஸ்வந்தையும் சில குண்டுகள் பதம் பார்த்தன.

இப்போது ஜஸ்வந்த் சிங் ராவத் ஒற்றை ஆளாக இந்தோ - சீனத்தின் எல்லைப் பகுதியை காக்கிறார். கடல் மட்டத்தில் இருந்து சுமாராக 10,000 அடியில் இருக்கும் நூர்னாங்கில் அப்போது கடுங்குளிர். எலும்பு விரைக்கிறது. இரவு நேரத்தில் சீனர்களும் போரை நிறுத்துகிறார்கள். ஆனால் ஜஸ்வந்த் மனம் முழுவதும் சீனர்களை விரட்டுவதிலேயே இருக்கிறது. போரை நான் நடத்தலாம், ஆனால் சின்ன சின்ன உதவிகளை செய்ய ஆட்கள் தேவை என்று, கிராமத்திற்குள் சென்று உதவி கேட்க, நுரா & சிலா என்று இரண்டு பெண்கள் உதவிக்கு வருகிறார்கள்.

இரவோடு இரவாக தாக்குதலை மனதில் வைத்து, கச்சிதமான வியூகம் அமைத்து, பல பதுங்கு குழிகளில் துப்பாக்கிகளை பொருத்துகிறார். அதிகாலை 5 மணிக்கு எல்லாம் துப்பாக்கி சப்தம் கேட்கத் தொடங்குகிறது. "வாடா இதுக்குத்தான் காத்துக்கிட்டிருந்தேன்" என்கிற ரீதியில் பொருத்திய துப்பாக்கிகளை புன்னகையோடு, லாகவமாக, நிதானமாக தன்னிடம் இருக்கும் குண்டுகளை கணக்கிட்டு குறிவைத்து சீனர்களைத் துளைக்கிறார். இப்படி இந்திய எல்லைகளை சரியான பின்புலம், உணவு, தூக்கம் இல்லாமல் 72 மணி நேரம் காக்கிறார்.
முதல் 8 மணி நேரத்திலேயே சீனர்களுக்கு குழப்பம் தொற்றிக் கொள்கிறது. நேற்றுவரை பதுங்கிய இந்திய ராணுவம், இன்று எப்படி இவ்வளவு பரவலாக, வலுவாக தாக்குகிறார்கள் என்று. இந்திய ராணுவம், தன் படையில் பெரும்பகுதியை அனுப்பி தங்களை தாக்குவதாக சீனர்கள் முடிவுக்கு வந்தனர். சுமார் 72 மணி நேர முடிவில் 300 சீன ராணுவத்தினர் உயிர் பிரிந்திருந்தது. வெறுப்பின் உச்சத்தில் இருந்த சீனர்களின் கையில், ஜஸ்வந்த் சிங்குக்கு உணவுப் பொருட்களை கொண்டு வரும், கிராமவாசி பிடிபட, அதே ராணுவ முறையில் விசாரணை நடக்கிறது. ரகசியம் உடைகிறது. ஜஸ்வந்தின் வியூகத்தை புரிந்து கொண்டு சீனர்கள் ஜஸ்வந்தை சூழ்கிறார்கள். சூழ்நிலையை புரிந்து கொண்ட ஜஸ்வந்த், தன் கைத் துப்பாக்கியில் இருந்த குண்டுகளை தானே சுவைத்தார். ஜஸ்வந்துக்கு உதவிய செலா ஒரு க்ரானைட் தாக்குதலால் கொல்லப்பட்டார். நுரா சீன ராணுவத்திடம் உயிருடன் பிடிபட்டார்.

சீனர்களுக்கு வெறி அடங்கவில்லை. "இந்த பொடிப் பயலா, நமக்கு 72 மணி நேரம் தண்ணி காட்டுனான் "என்று கோபம் கொப்பளிக்க... ஜஸ்வந்தின் தலையைத் துண்டித்தனர்.

போர் நிறுத்த ஒப்பந்தங்கள் வெளியான பிறகு சீன ராணுவ அதிகாரிக்கு விஷயம் தெரியவர, ஜஸ்வந்தை நினைத்துப் பெருமைப்படுகிறார். அவர் வீரத்தை கெளரவிக்கும் விதத்தில், ஜஸ்வந்தின் வெண்கல் சிலையை அவர் காவல் காத்த நூர்னாங்கில் நிறுவினார்கள் சீனர்கள். இன்று அந்த இடத்திற்கு ஜஸ்வந்த் கர் (Jaswant Garh) என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இன்று, அந்த இடத்தில், உண்மையாகவே ஜஸ்வந்த் ஒரு ராணுவ உயர் அதிகாரியாக இருந்தால் எப்படிப்பட்ட சேவை மற்றும் செளகரியங்கள் செய்வார்களோ அப்படிப்பட்ட சேவைகளை செய்து வருகிறார்கள் இந்திய ராணுவத்தினர். தினமும் ஜஸ்வந்த் உடுத்த சுத்தமான, ராணுவ விரைப்பிலேயே இஸ்திரி செய்த மிடுக்கான உடைகள், பளபளக்கும் ஷூக்கள், அவருடைய துப்பாக்கிகள் என்று அனைத்தையும் தினமும் காலை சுத்தம் செய்து தயார் நிலையில் வைக்கிறார்கள். இப்படித் தான் பாரத தாயின் வீரப் புதல்வனுக்கு தினமும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

சீன போர் முடிந்த பின், கோபால் சிங் மற்றும் திரிலோக் சிங் நேகிக்கு வீர் சக்ரா விருதும், ஜஸ்வந்த் சிங் ராவத்துக்கு மஹா வீர் சக்ரா விருதும், பதக்கமும் வழங்கி இந்திய அரசு தன் வீர மகன்களை கெளரவித்துக் கண்ணீர் சிந்தியது. இன்று வரை தவாங் நகருக்கு செல்லும் அனைத்து ராணுவ வீரர்களும், ஜெனரல் தொடங்கி ஜவான் வரை அனைவரும் தங்கள் வீர வணக்கத்தை ஜஸ்வந்துக்கு செலுத்திவிட்டு தான் கடக்கிறார்கள். இன்றும் ஜஸ்வந்த் சிங் ராவத் பயன்படுத்தி பொருட்கள், துப்பாக்கிகள், பெயர் பலகை, ராணுவ சீருடைகள், பதவியை பிரதிபலிக்கும் ஸ்டார்கள் எல்லாம், ஜஸ்வந்த் கர்ரில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

ஜஸ்வந்தின் சிங் ராவத் பெயரைக் கேட்கும் போதெல்லாம், ‛மொத்த இந்திய தேசத்தை ஒற்றை ஆளாகக் காத்தவர்’ என்கிற பெருமிதமும், கண்ணீரும் ஏனோ வந்துவிடுகிறது. ஜெய்ஹிந்த், வந்தே மாதரம், பாரத் மாதாகி ஜெய் போன்ற வீர முழக்கங்களுக்கு எத்தனை பேரின் உயிரையும், ரத்தத்தையும் விலை கொடுத்திருக்கிறோம் என்று தெரியவில்லை.

ஜெய்ஹிந்த்...!

No comments:

Post a Comment

Followers

J.ELANGOVAN.TRICHY