PENCIL DRAWING
தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 14-01-2017
PONGAL FESTIVAL
"""பொங்கலோ பொங்கல்"""
PONGAL FESTIVAL 14- 01 - 2017 |
"""பொங்கலோ பொங்கல்"""
நண்பர்கள் அனைவருக்கும் என் கைச்சித்திரத்துடன் இனிய பொங்கல்
நல் வாழ்த்துக்கள்...
தமிழர் திருநாளாம், பொங்கல் திருநாள் 14.1.2017 (சனிக்கிழமை) அன்று வருகிறது.
பால் பொங்கும் பொழுது சங்கு ஊதுவோடு, ‘பொங்கலோ, பொங்கல்’ என்று சொல்லி வழிபட வேண்டும்.
கூட்டாக ஒற்றுமையுடன் வாழ, பல்வேறு காய்கறிகளைக் கொண்டு கூட்டுக்குழம்பு வைக்க வேண்டும்.
வாழ்க்கை இனிக்க, கரும்பும் வைத்து வழிபடுங்கள்.
நைவேத்தியம் படைக்கும் பொழுது சூரியன் இருந்து சாப்பிடுவது போல இலை அமைந்திருக்க வேண்டும்.
கதிரவன் வழிபாடு கனிவான வாழக்கையை அமைத்துக்கொடுக்கும்.
மகத்துவம் தரும் மண்பானைப் பொங்கல் :
முன்பெல்லாம் மக்கள் மண் பானையில் தான் பொங்கல் வைப்பார்கள். ஆனால் தற்காலத்தில் ‘உருளி’ எனப்படும் செம்பில் பொங்கல் வைக்கிறார்கள். உடல் நலம் சீராக இருப்பதற்கு, மண்பானை சமையல்தான் ஏற்றது என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
காலத்தின் சூழ்நிலையால் நாம் அதைத் தினமும் கடைப்பிடிக்க முடியாவிட்டாலும், பொங்கல் அன்றாவது மண் அடுப்பில் விறகு வைத்து எரித்து, அதன் மீது மண்பானையில் மஞ்சள் கொத்து வைத்துக்கட்டிக் கோலமிட்டு பொங்கல் வைப்பதே மகத்துவமானது.
No comments:
Post a Comment