Tuesday, January 10, 2017

PENCIL DRAWING K.J.YESUDAS - 10- 01 - 2017

                                                 PENCIL DRAWING 

                                                                           K.J.YESUDAS
           
PENCIL DRAWING K.J.YESUDAS - 10- 01 - 2017
PENCIL DRAWING K.J.YESUDAS - 10- 01 - 2017

இன்று 10-01-2017 பிறந்தநாள் காணும் K.J.யேசுதாஸ் அய்யா அவர்களை என் கைச்சித்திரத்துடன் வணங்குகிறேன்...
இயற் பெயர் கட்டசேரி யோசப் யேசுதாஸ்
பிற பெயர்கள் கான கந்தர்வன்
பிறப்பிடம் கொச்சி, கேரளா, இந்தியா
இசை வடிவங்கள் கருநாடக இசை
திரையிசை
இசை இயக்குனர்
இசைத்துறையில் 1961–நடப்பு
இணையத்தளம் www.yesudas.com
கட்டசேரி யோசஃப் யேசுதாஸ் (மலையாளம்: കാട്ടശ്ശേരി ജോസഫ് യേശുദാസ്) , (பிறப்பு 10 சனவரி 1940) அல்லது பரவலாக கே.ஜே.யேசுதாஸ், ஓர் இந்திய கருநாடக இசைக் கலைஞரும் புகழ்பெற்றத் திரைப்படப் பாடகரும் ஆவார். அவர் தமது 50 ஆண்டுகள் திரைவாழ்வில் மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காள மொழி, குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமசுகிருதம், துளு, மலாய் மொழி, உருசிய மொழி,அராபிய மொழி, இலத்தீன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 40,000-க்கும் கூடுதலான திரைப்பாடல்களைப் பாடியுள்ளார்.[2][3] சிறந்த திரைப் பின்னணிப் பாடகர் வகையில் வேறு எந்தப் பாடகரும் சாதிக்காத நிலையில் ஏழு முறை தேசிய விருது பெற்றுள்ளார்.மாநில அளவில் கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்க அரசுகளிடம் மொத்தம் 45 முறை சிறந்த திரைப்பாடகராக விருது பெற்றுள்ளார். திரையிசைத் தவிர,கருநாடக இசைக் கச்சேரிகள் பல நிகழ்த்தியுள்ளார். சமயப் பாடல்கள், பிற மெல்லிசைப்பாடல்கள் அடங்கிய இசைத்தொகுப்புகளையும் வழங்கியுள்ளார். மலையாளத் திரைப்படங்களுக்கு இசை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். இவரை கான கந்தர்வன் என்று இவரது இரசிகர்கள் அழைக்கின்றனர்.
யேசுதாஸ் இலத்தீன் கத்தோலிக்கக் குடும்பத்தில் அகஸ்டைன் யோசப்குக்கும், அலைசுகுட்டிக்கும் மகனாக கேரளாவின் ஃபோர்ட் கொச்சியில் பிறந்தார். அவரது தந்தை அனைவரும் அறிந்த மலையாள செவ்விசைக் கலைஞரும் நடிகரும் ஆவார். துவக்கத்தில் இசைப்பயிற்சியை அவரிடமே கற்ற யேசுதாஸ் பின்னர் திருப்புனித்துறையில் இருந்த இசை அகாதெமியில் தனது இசைக் கல்வியைத் தொடர்ந்தார். சற்றுகாலம் வேச்சூர் அரிகர சுப்பிரமணிய அய்யரிடம் பயின்ற பின்னர் செம்பை வைத்தியநாத பாகவதரிடம் மேல்நிலைப் பயிற்சி பெற்றார். இந்துஸ்தானி இசையிலும் தேர்ச்சி பெற்றார்.
திரையிசைப் பங்களிப்புகள் தொகு

யேசுதாஸ் திரைப்படப் பாடகராக 1960களில் கால்பாடுகள் என்ற மலையாளத் திரைப்படத்தில் துவங்கினார்[5]. தமிழ்த் திரைப்படங்களில் எஸ். பாலச்சந்தரின் பொம்மையில் முதன்முதலாக "நீயும் பொம்மை, நானும் பொம்மை" என்ற பாடல் மூலம் அறிமுகமானார். ஆனால் முதலில் வெளியான படமாக கொஞ்சும் குமரி அமைந்தது. 1970களில் இந்தித் திரைப்படங்களில் பாடத்துவங்கினார். முதல் இந்தி மொழிப்பாடல் "ஜெய் ஜவான் ஜெய் கிசான்" என்ற திரைப்படத்திற்கு பாடினார். ஆயினும் அவர் பாடி வெளிவந்த முதல் இந்திப் படமாக "சோடிசி பாத்" அமைந்தது. இவற்றைத் தொடர்ந்து பல மொழிப்படங்களில் பல்லாயிரக்கணக்கானப் பாடல்களைப் பாடி பல விருதுகளையும் பெற்றார். 2006ஆம் ஆண்டு சென்னை ஏவிஎம் அரங்கில் ஒரேநாளில் நான்கு தென்னிந்திய மொழிகளிலும் 16 திரைப்படப் பாடல்களை பாடி சாதனை நிகழ்த்தினார்..


Kattassery Joseph Yesudas (born 10 January 1940) is an Indian Carnatic musician and film playback singer. Yesudas sings Indian classical, devotional and cinematic songs. He has recorded more than 40,000 songs in a number of Indian languages as well as Malay, Russian, Arabic, Latin and English during a career spanning more than five decades.[1][2] He has performed in most Indian languages except Assamese, Konkani and Kashmiri.[3][4] He also composed a number of Malayalam film songs in the 1970s and 1980s. Yesudas is fondly called Gana Gandharvan (The Celestial Singer). He is also known as a Cultural Icon of Malayalam language - as well as of its ethnic group spread across the world - due largely to the fact that his songs have been profoundly ingrained into the minds of Malayalam speaking people for five decades. 

No comments:

Post a Comment

Followers

J.ELANGOVAN.TRICHY